ஒரு தலை ராகம் பட நடிகர். கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு. வெளியில் பெரிதாக தெரியாத மரணம்.

0
490
- Advertisement -

மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் கைலாஷ் நாத். இவர் கேரள மாநிலம் மன்னார் பகுதியை சேர்ந்தவர். இவர் மிமிக்ரி கலைஞர் ஆக தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த சங்கம் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஏதோ ஒரு ஸ்வப்னம், சேதுராமய்யர் சிபிஐ, சீதா கல்யாணம், யுகபுருஷன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதுவரை இவர் 163 படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக தமிழில் டி.ராஜேந்திரன் இயக்கி நடித்த ஒரு தலை ராகம் படத்தில் தம்பி என்ற கதாபாத்திரத்தில் கைலாஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் பாலைவனச் சோலை என்ற படத்தில் நடித்திருந்தார். பின் சூப்பர் ஸ்டார் நடித்த வள்ளி திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்ட பெற்றிருந்தது.

- Advertisement -

கைலாஷ் நடித்த படங்கள் :

மேலும், இவர் தமிழ் சினிமாவில் 90 படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி வேடங்களில் தான் நடித்தார். அதுமட்டுமில்லாமல், இவர் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

கைலாஷ் நண்பர்கள்:

இப்படி கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கைலாஷ் நாத் அவர்கள் சினிமாவில் பயணித்திருந்தார். அதோடு தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவி இவருடைய பள்ளி வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் கைலாஷ் அவர்கள் அஜிதா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

-விளம்பரம்-

கைலாஷ் நாத் இறப்பு :

இப்படி ஒரு நிலையில், சமீப காலமாகவே இவர் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்திருந்தார். இதனால் இவர் சில மாதங்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதம் சிகிச்சை பலனில்லாமல் நடிகர் கைலாஷ் நாத் இறந்தார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கைலாஷ் நாத் நண்பர்கள் ஆதங்கம்:

இதனை அடுத்து பலரும் கைலாஷ் நாத் அவர்களின் இறப்பு குறித்து இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அப்போது இவருக்கு 65 வயது தான் ஆகியிருந்தது. இந்நிலையில் இவருடைய இறப்பு குறித்து நெருங்கிய நண்பர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், ஒரு தலை ராகம் படத்தில் கைலாஷ் நாத் உடைய பயணம் தொடங்கியது. அதற்கு பின் அவர் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால், அவருடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் தான் கிடைக்கவில்லை. இது கடைசி வரை அவருக்கு ஆதங்கமாகவே இருந்தது என்று கூறி இருந்தார்கள்.

Advertisement