நடுநாடானின் நாட்டாமை, எப்படி இருக்கிறது,RK சுரேஷின் ‘காடுவெட்டி’ – முழு விமர்சனம் இதோ.

0
311
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர் கே சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நகரத்தில் வாழும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், கிராமத்தில் இருக்கும் மக்கள் காதலை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை தான் இயக்குனர் காட்ட முயற்சித்து இருக்கிறார். நகரத்து காதல் என்றால் பெற்றோர்கள் காதலிப்பவர்கள் ஆகியோருடன் இந்த பிரச்சனை முடிந்து விடும். அதே கிராமத்து காதல் என்றால் மக்கள், சாதி, எந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

படத்தில் ஹீரோ தன்னுடைய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் சாதி சங்க தலைவராக இருக்கிறார். இவர் காதல் திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவது, குடும்ப பிரச்சனை என்றெல்லாம் இருக்கிறார். இறுதியில் கிராமத்து-நகரத்து காதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி ஆர் கே சுரேஷ் கையாண்டார் என்பதே படத்தின் மீதி கதை.

ஆரம்பக் காட்சியே நிறைய லாஜிக் மிரல்கள் இருக்கிறது. குறிப்பாக, ஆர்கே சுரேஷ் என்ட்ரி காட்சிகள் எல்லாம் பில்டப் ஆக இருக்கிறது. வழக்கம்போல் நாடகக் காதல் என்ற பெயரை இந்த படத்திலும் இயக்குனர் அரைத்த மாவிற்கு பதிலாக புளித்த மாவை அரைத்திருக்கிறார். பல இடங்களில் வசனங்கள் எல்லாம் மியூட் செய்து விட்டிருக்கிறார்கள். இல்லையென்றால் தேவையில்லாத சர்ச்சை கிளம்பி இருக்கும் என்று சொல்லலாம். மேலும், சில வசனங்கல்லாம் ‘போதும்டா எப்ப விட்டு விடுங்கள்’ என்று அலறும் அளவிற்கு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாராட்டக்கூடிய ஒரே விஷயம் பின்னனி இசையும், ஒளிப்பதிவும் தான். சாதிக் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இருந்தாலும் இவர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் கிராம மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பயங்கர கடுப்பை ஏற்றி இருக்கிறது. மொத்தத்தில் ஆள விட்டா போதும் என்ற அளவிற்கு காடுவெட்டி படம் இருக்கிறது.

நிறை:

நகர- கிராமத்து காதல் கதை

பின்னணி இசை நன்றாக இருக்கிறது

கிராம வாழ்க்கை அழகாக காண்பித்திருக்கிறார்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக நிறைகள் எதுவுமில்லை

குறை:

ஆரம்பம் முதல் இறுதி வரை நிறைய லாஜிக் குறைபாடுகள்

பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது

சில வசனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது

கிளைமாக்ஸ் காட்சி நன்றாகவே இல்லை

கதைக்களத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் காடுவெட்டி- வெட்டி பஞ்சாயத்து

Advertisement