இதுக்கு நான் 22 டேக் எடுத்திருப்பேன், ஒரே டேக்ல மடிச்சிடீன்களேனு பாராட்டினார் – ஜெயிலர் அனுபவம் பகிர்ந்த நிஷா

0
1871
- Advertisement -

ஜெயிலர் படம் அனுபவம் குறித்து அறந்தாங்கி நிஷா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது. பின் இவர் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளும் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் அறந்தாங்கி நிஷா போலீஸ் காதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ஜெயிலர் பட அனுபவம் குறித்து அறந்தாங்கி நிஷா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நெல்சன் சாருடைய அசிஸ்டன்ட் டைரக்டர் மணி தான் என்னிடம் ஜெயிலர் படம் குறித்து பேசினார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

ஜெயிலர் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்று சொன்னார். நெல்சன் சார் தான் கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் தான் எனக்கு என்று ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. ஆரம்பத்தில் இது ரஜினி சாரோட படம் என்று எனக்கு தெரியாது. உங்க போட்டோவும் அனுப்பி இருக்கின்றோம். சார் பார்த்துட்டு சொல்லுவாங்க என்று மணி சொல்லியிருந்தார். அதற்கு பிறகு சார் ஓகே சொல்லிட்டாரு என்று சொன்னார். ரஜினி சாரோட படம் என்று தெரிந்ததும் சார் கூட காம்பினேஷன் இருக்குமா! நம்மள செலக்ட் பண்ணுவார்களா! என்றெல்லாம் ரொம்ப பயமாக இருந்தது.

அறந்தாங்கி நிஷா அளித்த பேட்டி:

இதுவரைக்கும் நான் போன படங்கள் எல்லாமே சூட்டிங் கூப்பிடுவாங்க, போய் நடித்துவிட்டு வருவேன் அவ்வளவு தான். இந்த படம் கமிட்டானதும் திடீரென்று ஒரு நாள் போன் பண்ணி சன் டிவி ஆபீசுக்கு அக்ரீமெண்ட் போட வர சொன்னார்கள். அக்ரிமெண்ட் எல்லாம் போடப் போறாங்க. கண்டிப்பா நம்மள செலக்ட் பண்ணிடு வாங்கன்னு சந்தோஷமா போய் அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு வந்தேன். மறுபடியும் ஒரு நாள் லுக் டெஸ்ட்க்காக வாங்க என்று சொன்னார்கள். பின் இந்த கேரக்டர் கொஞ்சம் மெச்சூர்டா வேணும் என்று தலையில் எண்ணெய் ஊற்றி பெரிய பொட்டெல்லாம் வைத்து என்னை கொஞ்சம் மாற்றினார் நெல்சன் சார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் அனுபவம்:

இந்த அனுபவம் எனக்கு ரொம்ப புதுசாக இருந்தது .ரஜினி சாரை எப்போ மீட் பண்ணுவேன் என்று இருந்தது. ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் சூட் ரஜினி சார் கூட தான் எனக்கு இருந்தது. எனக்கு வயிறு கலக்கிவிட்டது. ரொம்ப நேரம் கேரவனிலிருந்து எனக்கு டயலாக் பேப்பர் எதுவும் வரவில்லை. ஷாட் போறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் சீன் பேப்பரை கொடுத்தார்கள். பின் ரொம்ப டேக் எடுக்காதீங்க! சார் வராங்க மனப்பாடம் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டார். எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. பின் ரஜினி சார் நான் என்ன பேச போறேன் என்று படிச்சிட்டு இருந்தார். டேக் சொன்ன உடனே அந்த சீனை ஒரே டேக்கில் ஓகே பண்ணினேன்.

nisha

ரஜினி குறித்து சொன்னது:

அந்த சீன் நான் பண்ணி முடித்ததும் என்னை கட்டிப்பிடித்து ரஜினி சார் பாராட்டினார். இந்த டயலாக் நான் பேசியிருந்தால் 22 டேட் எடுத்து இருப்பேன். நீங்க ஒரே டேட்கில் சூப்பரா பண்ணிட்டீங்க என்று அவரை தாழ்த்தி, என்னை உயர்த்தி பேசினார். எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் இதை சொல்லிட்டே இருப்பார். இப்படி ஒரு பெரிய லெஜெண்டை சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் கூட மூன்று நாள் வொர்க் பண்ணினேன். அவ்ளோ பாஸ்டிவ் எனர்ஜி. அவர் செட்டில் குழந்தை மாதிரி விளையாடிட்டே இருப்பார். அவரெல்லாம் என்ன மாதிரி ஒருத்தரை மனசார பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. நெல்சன் சாருடைய மிகப்பெரிய முயற்சியாக இந்த ஜெயிலர் படம் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement