இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் வெறுப்பெற்றி வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.
இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை:
மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதில் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அதோடு இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள். பின் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.அப்போதே இது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பின் ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார்.
#Jailer Positive Review !!🥳🔥🔥
— Rxᴅ_Uᴅʜᴀʏᴀɴ (@Itz_Rxd1) August 10, 2023
Nee @Nelsondilpkumar Adu Mamea!!🕺🔥#VidaaMuyarchi #JailerFDFSpic.twitter.com/2h2ZqiAcwA
அதேபோல் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் விஜய் குறித்து பேசியது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நடந்திருக்கிறது. இதில் யார் காக்கா, யார் கழுகு என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.பின் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
Anils ~ #Jailer a Flop. ஆக்க போறம்…
— 𝐀𝐒𝐀𝐋 𝐔𝐌𝐄𝐒𝐇 👑 (@Thalaumesh071) August 10, 2023
AK fans – எங்கள தாண்டி தொட்றா பாக்கலாம் 🔥🔥🔥🥱#Ajithkumar #VidaaMuyarchi pic.twitter.com/VNbPBJR0PJ
இதனால் ரஜினி மீது கடும் கோபத்தில் ஆழ்ந்த விஜய் ரசிகர்கள் பலரும் ‘ஜெயிலரை failure ஆக்குவோம்’ சபதம் எடுத்தனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத விதமாக ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் ட்விட்டரில் விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் வெறுப்பேற்றும் வகையிலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் பல மீம்கள் வைரலாகி வருகிறது.