உதவி கேட்டா முடியாதுனு சொல்றாங்க, அதான் நாங்களே போறோம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா செய்யும் உதவி.

0
285
Nisha
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசியதில் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீட்பு பணிகள்:

மேலும், நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அறந்தாங்கி நிஷா வீடியோ:

பின் ஆங்காங்கே சிலர் உணவு, குடிக்க தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க திருச்சியில் இருந்து சென்னை வந்திருக்கிறார். ஆயிரம் பேருக்கு உணவு வழங்க தாம்பரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார். இது குறித்து அவர், சென்னையில் மழை பெய்கிறது என்று எந்த வாகனங்களையும் வாடகைக்கு தர மறுக்கிறார்கள்.

வேதனையில் நிஷா சொன்னது:

நாங்கள் திருச்சியில் இருந்து வருகிறோம். சாப்பாடு மட்டும் தாம்பரத்தில் செய்ய சொல்லி இருக்கிறோம். அங்கும் சாப்பாடு எடுத்துச் செல்ல வண்டி கேட்டதற்கு யோசிக்கிறார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் எங்களுடைய காரிலேயே வைத்து எடுத்துக்கொண்டு செல்கிறோம். வெள்ளத்தால் வண்டி ஓண்ணும் மூழ்கிடாது. நாங்கள் எங்களுடைய வண்டிலையே போயிட்டு திரும்பி வீட்டிற்கு வந்து அந்த வீடியோவையும் போடுகிறோம். தயவுசெய்து இது மாதிரி நேரத்தில் வாகனங்கள் கேட்டால் உதவி செய்யுங்கள். யாரும் முடியாது என்று மறுக்காதீர்கள். பல பேர் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு வாகனங்களை கொடுத்து உதவுங்கள் என்று வேதனையாக பேசி இருக்கிறார்.

Advertisement