புயல் நேரத்தில் ஷூட்டிங் தேவை தானா? விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி சீரியல். Trpயை காப்பாற்ற இப்படியா?

0
433
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற சரவணன் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். இந்தத் தொடரின் ஹீரோ நிவின் காவிரியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அவர்கள் இருவருக்கும் காதல் மலர்வது ஒரு பக்கமாக இருக்கின்றது.

-விளம்பரம்-

மற்றொரு பக்கம் பசுபதியை காவேரி குடும்பத்திற்கு துரோகம் செய்து விடுகிறார். இதை அனைத்தையும் காவேரி தெரிந்து கொள்கிறாள். இதை பற்றி தெரிந்து கொண்ட பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனால் நிவினும் காவிரியும் பசுபதியின் உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலபடுத்தி காட்டுகிறார்கள். பின் தன் அப்பா சம்பாதித்த பணத்தை வாங்கி கொண்டு ஊரை விட்டு காவேரி குடும்பம் வெளியேறுகிறது.

- Advertisement -

மகாநதி சீரியல்:

பின் சந்தானம் கடைசி மகள் நர்மதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை காரணத்தினால் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய். அவரும் பசுபதி இடம் சண்டை இட்டு காவிரி குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கின்றார். குமரனின் அக்கவுண்ட்டில் இருந்த பணம் யாரும் எதிர்பாராதவிதமாக தொலைந்து போகின்றது. இதனால் நர்மதா சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள்.

சீரியல் ட்ராக்:

நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள். இதனைப் பார்த்து விஜய் வீட்டார் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். காவிரியின் இந்த திருமணம் நீடிக்குமா? விஜய்- காவேரி இருவர் மத்தியில் காதல் மலருமா? உண்மையை நவீன் தெரிந்து கொள்வாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியல் நடிகை மாற்றம்:

மேலும், மகாநதி சீரியல் சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா விலகி தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார். இந்த நிலையில் சில தினங்களாகவே மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தது. இதனால் பல மக்கள் பாதிக்கபட்டது மட்டுமில்லாமல் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் கூட சூட்டிங் என்று நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே, TRP யை தக்க வைக்க இப்படியா செய்வது என்று கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகிறார்கள் .

மிக்ஜாம் புயல்:

கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு இருந்தது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement