இலங்கையில் மகளிடம் தனது உருவைத்தை கேலி செய்த நபர் – தனுக்கு நேர்ந்த அவமானம் குறித்து அரவிந்த் சாமி.

0
544
- Advertisement -

சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான்.

-விளம்பரம்-

இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பின் இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு தொழிலில் கவனம் செலுத்தினார்.

- Advertisement -

இதனால் நடுவில் அரவிந்த்சாமி சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு கடல் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தனை தொடர்ந்து இவர் செக்க சிவந்த வானம், தனி ஒருவன்,போகன் போன்ற பல படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தனது சொட்டையால் ஏற்பட்ட அவமானம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ‘என்னுடைய உடல் நிலையானது சரியாக இல்லாமல் இருந்த போது எடுத்த மாத்திரைகளால் தான் நான் குண்டாக மாறி முடியெல்லாம் கொட்டிவிட்டது. இதனால் பலர் என்னை கேலி செய்து இருந்தனர். அதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதை பார்த்து நான் வருத்தப்படவும் இல்லை. இதற்கு ஒரு உதாரணமாக, நான் ஒரு சமயம் எனது மகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது நான் மிகவும் குண்டாக இருந்தேன்.

-விளம்பரம்-

அப்போது ஒரு நாள் ஒரு உணவகத்தில் என்னுடைய மகளுடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் மகளிடம்’உன் அப்பாவை கம்மியாக சாப்பிட சொல்லு’ என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு ஓன்றும் பெரிதாக தெரிவில்லை. ஆனால், சின்ன பெண்ணாக இருந்த என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும். அதெல்லாம் என்னால் மறக்கவே முடியாது ‘ என்று கூறியுள்ளார்.

அரவிந்த்சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா அகியோர்களை தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஓய்வான நேரத்தை தனது பிள்ளைகளுடன் செலவழித்து வருகிறார் அரவிந்தசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement