யார் டகார். தனது சிறு வயது புகைப்படத்தை வைத்து வந்த மீம். கடுப்பான ராஷ்மிகா.

0
18982
Rashmika
- Advertisement -

சினிமாவில் ஒரே ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rashmika-mandanna-photo.jpg

தனது முதல் படத்திலேயே அனைவர் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலி என்ற பாடல் அனைவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சிலும் ஆக்கரமிப்பு செய்தது.

இதையும் பாருங்க : யாருக்கு வயசாகுது. ரௌடி பேபி பாடலுக்கு இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கிரண்.

- Advertisement -

தற்போது தமிழ் தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரெமோ பட இயக்குனர் இயக்கி வரும் ‘சுல்தான்’ என்ற படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார். இது தான் இவரது முதல் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தான் முதலில் விஜய் 63 படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால், இவருக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் தனது சுட்டித்தனமான பேச்சால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். அதிலும் கார்த்தியின் ‘சுல்தான்’ பட பூஜை விழாவில் இவர் தமிழில் பேசி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை வைத்து கன்னடத்தில் மோசமான மீம் ஒன்றை வெளியிட்டுள்ளதை கண்டு ராஷ்மிகா கடும் கோபமடைந்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த மீமில் ‘யாருக்கு தெரியும், இந்த சின்ன பெண் எதிர்காலத்தில் சர்வதேச டகராக வருவார் ‘ டகார் என்றால் கன்னடத்தில் விபச்சாரி என்று அர்த்தம். தனது சிறு வயது புகைப்படத்தை வைத்து இப்படி ஒரு கேவலமான மீம் வந்துள்ளதை கண்டு கடுப்பான ராஷ்மிகா, அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நடிகர்களை இதுபோன்று செய்வதன் மூலமாக உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் உங்களுக்கு எளிதாக டார்கெட் ஆகிவிடுகிறோம் என்பதாலா ?

பிரபலமாக இருப்பதால் இதுபோன்று செய்வதா ? பலரும் தவறானகமன்ட்களையும், கேலிகளையும் கண்டு கொள்ளாதீர்கள் என்று கூறுகிறார்கள். அதைத்தான் நானும் செய்கிறேன். நான் செய்யும் வேலைகள் குறித்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், யாருக்கும் குடும்பத்தையோ தனிப்பட்ட வாழ்க்கையும் குறை கூற உரிமை கிடையாது. இதுபோன்ற கேவலம் வேறு எந்த நடிகருக்கும் நடக்கக்கூடாது. எந்த வேலை செய்தாலும் அதற்கான மரியாதை கிடைக்க வேண்டும். முதலில் ஒருவருக்கு ஒருவரை மரியாதையாக நடத்த வேண்டும். இதை செய்தவருக்கு மிக்க நன்றி, நீங்கள் என்னை காயப்படுத்தி உள்ளீர்கள் என்றுஎன்று திட்டித் தீர்த்துள்ளார்.

Advertisement