கமல் ரசிகன், விஜய் ரசிகன்னு எல்லாம் நான் ஓட்டு போட மாட்டேன் – அரவிந்த் சாமியின் தெளிவான பேச்சு.

0
169
- Advertisement -

விஜயின் அரசியல் குறித்து நடிகர் அரவிந்த்சாமி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் அவர்கள் நேற்று மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விஜய் கட்சி குறித்த தகவல்:

அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகிறது. தற்போது விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் அரவிந்த்சாமி வீடியோ:

அந்த வீடியோவில் அவர், நான் ரஜினி, கமல் சாருடைய பெரிய பேன். விஜய் சார் உடைய பெரிய ஃபேன். ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு. நான் ரசிகனாக இருப்பதால் அவர்களுக்கு ஓட்டு போட முடியாது. நான் ஓட்டு போட மாட்டேன். அவர்கள் சொல்லும் விஷயத்தால் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா? உங்களுடைய நல்ல எண்ணம், நோக்கம் முதலில் எனக்கு புரியணும், பிடிக்கணும். நீங்கள் ஒரு நல்ல நடிகர். நீங்கள் அரசாங்கத்தை ஆளக்கூடிய தகுதி உடையவர் என்பது நாங்கள் எப்படி நம்புவது? உங்களுக்கு அதன் மீது ஆர்வம் இருப்பது புரிகிறது.

பிரபலங்கள் அரசியல் குறித்து சொன்னது:

நீங்கள் இத்தனை வருடமாக ஹீரோவாக இருப்பதினால் நீங்கள் எல்லோரையும் காப்பாற்றலாம் என்ற ஒரு மைன்ட்செட்டில் கூட இருக்கலாம். நீங்கள் தமிழ்நாட்டினுடைய தலைவராகவதற்கான கொள்கைகளை கையாளும் திறமை இருக்கிறதா? நான் உங்களால் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. உங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வதை உங்களால் கண்காணிக்க கூடிய அளவிற்கு கெப்பாசிட்டி இருக்கிறதா? யோசிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பல பேர் அரசியலில் நுழைந்திருக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர், விஜயகாந்த் பிறகு யாரும் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி வரவே இல்லை. கமல் வெற்றி பெற முடியவில்லை. தற்போது விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறுகிறார்கள். இவர் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement