வித்தார்த், பூர்ணா நடிப்பில் மிஸ்கின் இசையில் வெளியாகி இருக்கு ‘டெவில்’ படத்தின் முழு விமர்சனம்

0
179
- Advertisement -

தற்போது பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டெவில். இந்த படத்தை சவரக்கத்தி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விதார்த், திரிகுன், மிஷ்கின் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ரோஷன் என்பவர் டிராவலர் வைத்திருக்கிறார். இவர் பைக் ஓட்டி கொண்டு வரும்போது எதிர்பாராத விதமாக ஹேமா என்பவர் தன்னுடைய காரால் இடித்து விடுகிறார். இதனால் ரோஷனுக்கு கையில் பலமாக காயம் ஏற்படுகிறது. பின் ரோசனை ஹேமா மருத்துவமனையில் சேர்கிறார். பின் அவர் ரோசனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றி காட்டுவது, ரெஸ்டாரண்ட் அழைத்துச் செல்வது என அவருடன் நட்பாக பழக ஆரம்பிக்கிறார்.

- Advertisement -

மேலும், சில நாட்களிலேயே அவர்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இதை அறிந்து ரோஷினிடமிருந்து ஹேமா விலகி தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். ஆனால், இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கிறது. இவருடைய கணவர் விதார்த். வீட்டிற்கு வரும்போது அவருடைய கணவர் விதார்த் உறைந்து போய் உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது? அவருக்கும் ஹேமாவிற்கும்மான திருமணம் என்னானது? ரோஸன் நட்பு ஹேமாவின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள்? செய்கிறது என்பதே படத்தின் மீதி கதை.

மொத்த படத்தையும் ஹேமாவாக நடித்து இருக்கும் பூர்ணா தாங்கி சென்றிருக்கிறார். அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு வியக்கும் வகையில் இருக்கிறது. காதலும் வில்லத்தனமும் கலந்த கலவையில் ரோஷனாக நடித்திருக்கும் திரிகுன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் விதார்த் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இயக்குனரின் கதைகளும் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் முதன் முதலாக இசையமைத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. வசனங்கள் இல்லாத இடங்களில் கூட இசையால் இயக்குனர் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக டெவில் இருக்கிறது.

நிறை:

பூர்ணா நடிப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

விதார்த் நடிப்பு ஓகே

கதைக்களம் நன்றாக இருக்கிறது

குறை:

முதல் பாதி நீளத்தை குறைத்திருக்கலாம்

இரண்டாம் பாதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

சில தேவையில்லாத காட்சிகள்

இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் டெவில்- சுவாரசியம் இல்லை

Advertisement