விஜய்யின் த.வெ.க கட்சி பெயருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – த.வெ.க கட்சி தலைவர் வேல்முருகன் கிளப்பிய புதிய சர்ச்சை.

0
301
- Advertisement -

விஜய்யின் கட்சி பெயரை பயன்படுத்துக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவித்து இருந்தார். விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை.

-விளம்பரம்-

2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரில் பிழை இருப்பதாக பிரபல தமிழ் ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் விஜய்யின் கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி என்ற சொல்லுக்கும் பின்னால் ‘க்’ வர வேண்டும். எனவே ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதற்க்கு பதலாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று திருத்தம் செய்யுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

இதுவே விஜய்யின் கட்சி கேலிக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது விஜய்யின் கட்சி பெயருக்கே புதிய சிக்கல் வந்து இருக்கிறது. அதாவது அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு தனது வாழ்த்துக்களை கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் TVK தான் என்றும் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ‘இதுகுறித்து வேல்முருகன் தெரிவிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சுருக்கமாக TVK என்று பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தை முறையிடுவோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை TVK என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறோம். விஜய் கட்சியும் TVK என்று அனுமதித்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement