வீடுகட்டி தருவதாக ஏமாற்றிய வழக்கு..!கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட்..!

0
245

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரராக இருந்தவர் கம்பீர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அணைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றார் கம்பீர். 

இந்நிலையில் கம்பீருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி நிறுவனம். டெல்லியின் காஜியாபாத் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ருத்ரா குரூப் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க ரூ.1.98 கோடி ரூபாயை 17 பேர் முன்பணமாக செலுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க: ஐ பி எல் 2019 ஏலத்தில் புதிய மாற்றங்கள்..!நிர்வாக குழு அதிரடி..!

ஆனால், சொன்னது போல வீடு கட்டி தரபடாததால் பாதிக்கப்பட்ட 17 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இந்த கட்டிட நிறுவனத்தின் விளம்பர தூதரக நடித்த கம்பீர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது.ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு 10000 ரூபாய் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்தது. இந்த சம்பவம் கம்பீர் ரசிகர்களிடேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.