“100 கோடி வந்தாலும் இனி அவர் கூட மட்டும் வேல செய்ய மாட்டேன்” – அர்ஜுன் உருக்கம்

0
363
arjun
- Advertisement -

100 கோடி ரூபாய் வந்தாலுமே விஷ்வக் உடன் பணிபுரிய மாட்டேன் என்ற நடிகர் அர்ஜுன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும், இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து இருக்கிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். இவர் 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

- Advertisement -

அர்ஜுனின் திரைப்பயணம்:

அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார். தற்போது அர்ஜுன் வில்லன், குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார். மேலும், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அர்ஜுன் இயக்கும் படம்:

இதனை தொடர்ந்து அர்ஜுன் தற்போது தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அர்ஜுன் அவர்கள் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வக் சென்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார். கதாநாயகியாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க இருக்கிறார். மேலும், படப்பிடிப்பீர் விரைவில் தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜுன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அர்ஜுன் அளித்த பேட்டி:

அப்போது படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து கூறியிருந்தது, எனது மகளை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்காக தான் இந்த படத்தை நான் தொடங்கினேன். நான் கதையை சொன்னதும் படத்தில் நடிக்க விஷ்வக் சென் ஒப்புக்கொண்டார். அதற்குபின் அவர் கேட்ட சம்பளத்தை நாங்களும் தர சம்பாதித்தோம். இருந்தாலும், ஜெகபதி பாபு போன்ற மற்ற மூத்த நடிகர்களுடன் நடிக்க படப்பிடிப்பில் விஷ்வக் சென் கலந்து கொள்ளவில்லை. அவரை நாங்கள் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், பதில் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் அவருக்கு போன் செய்தது போல் வேறு யாருக்குமே அத்தனை முறை போன் செய்திருக்க மாட்டேன்.

விஷ்வக் சென் குறித்து சொன்னது:

பெரிய ஸ்டாராக இருந்தும் அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரெல்லாம் தொழில் ரீதியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அதனால் தான் அவர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள். ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக்கிடம் சுத்தமாக இல்லை. இந்த ஒரு சூழலில் அவரை வைத்து இந்த படத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறேன் என்பதை பற்றி அனைவருக்கும் தெரிவிக்க தான் இந்த சந்திப்பு. அந்த அளவுக்கு என்னையும் என்னுடைய படகுழுவையும் அவர் அவமதித்திருக்கிறார். 100 கோடி வந்தாலும் இனி அவருடன் நான் பணிபுரிய மாட்டேன் என்று ஆவேசத்துடன் அர்ஜுன் பேசியிருக்கிறார்.

Advertisement