சேரனுக்கு இது தேவையா.! மிக மட்டமாக இருக்கு.! வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்.!

0
8601
- Advertisement -

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து கொண்டு தான் வருகிறது. மூன்று சீசன்களை கடந்தாலும் இந்த நிகழ்ச்சியில் வரும் ஆபாச வார்த்தைகளும் பெண் அணியும் ஆடைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி தான் வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில பிரபலங்கள் பங்குகொள்வது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான போட்டியாளராக இருந்து வருபவர் இயக்குனர் சேரன்.

இதையும் பாருங்க : ஷாலு பதிவிட்ட புகைப்படம்.! இடுப்பை குறித்து விமர்சித்த நபருக்கு ஷாலுவின் ரிப்லை.! 

- Advertisement -

இவர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போதே இவர் ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் என்று தான் ரசிகர்கள் பலரும் நினைத்தனர். அந்த வகையில் சேரன் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பேட்டியளித்துள்ளார் பிரபல நடிகரான அருள் தாஸ்.

Related image

இது குறித்து பேசியுள்ள அவர், இந்த நிகழ்ச்சியில் சரவணன் மட்டும் தான் மிகவும் உண்மையாக இருக்கிறார். மற்ற அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ட்ராமா செய்து கொண்டிருக்கின்றனர். சேரன் சாருக்கெல்லாம் இதெல்லாம் தேவையா, அவர் ஒரு மிகப்பெரிய இயக்குனர். அவர் மரியாதையை கெட்டு மனம் கெட்டு அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் சீரியல்கள் பல கலாச்சார சீரழிவு ஏற்பட்டது. சீரியலில் முக்காவாசி காட்சிகள் கள்ளத் தொடர்பை பற்றியது தான். சீரியல் 80 சதவீத கலாச்சாரத்தை அளித்து விட்டது தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி சீரழிவின் உச்சமாக இருந்து வருகிறது அரைகுறை ஆடையில் எல்லாரையும் கட்டி பிடிச்சிக்கிட்டு மிகவும் மட்டமான நிகழ்ச்சியாக தான் இருக்கிறது.

Advertisement