குட்டி ஸ்டோரிக்க்கு பின்னால் இருக்கும் ஆக்சிடண்ட் ஸ்டோரி. அருண் ராஜா கொடுத்த ஷாக்.

0
916
arunraja
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி, கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து உள்ளார் . அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருகிறார் . மேலும், தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளார் . இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-
Arunraja-Kamaraj

- Advertisement -

ஒரு குட்டி கத என்ற தலைப்பில் வெளியான இந்த பாடலை விஜய் பாடி இருந்தார். பொதுவாக நம்ம விஜய் அவர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தான் எழுதி இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கபட வேண்டிய விஷயம்.

இந்த நிலையில் இந்த பாடல் உருவான கதை குறித்து அருண் ராஜா காமராஜா, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இருப்பினும் குட்டி ஸ்டாரி பாடல் தான் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடல் எப்படி உருவானது என்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் தொகுப்பாளினி பாவனா, அருண் ராஜாவிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அருண் ராஜா, இந்த மாதிரி ஒரு பாட்டை கொடுத்ததற்கு அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி.

-விளம்பரம்-
Image result for arun raja kamaraj and vijay

எனக்கு இந்த படத்தில் நீங்கள் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று அழைப்பு வந்தது அதற்கு முன்பாக எனக்கு பாட்டின் ட்யூனை கூட அனுப்பி வைத்தார்கள். நான் கேட்டுவிட்டு அன்று மாலையே ரெக்கார்டிங் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.அன்று நான் திருவையாறுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து நான் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தேன் அப்போது விழுப்புரத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பாக டிரைவர் தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டுவிட்டது. இந்த விபத்தின்போது காரின் முன் பக்கம் இருக்கும் இரண்டு டயர்களும் நகரவே இல்லை. ஆனால் நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை யாருக்கும் எந்த அடியும் படவில்லை.

பின்னர் நான் மாலை சென்னைக்கு சென்றே ஆகவேண்டும் என்பதால் வண்டியை அங்கிருந்து வேறு ஒரு வண்டியை வைத்து டோ பண்ணி கிளம்பிவிட்டோம். பின்னர் அங்கிருந்து கிளம்பியதிலிருந்து ஒரு மூன்று மணி நேரத்திற்கும் மேல் அந்த பாடலை கேட்டுக் கொண்டே இருந்தேன். அது எனக்கு ஒரு எனர்ஜியை கொடுத்தது. அதில் வந்த லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா என்ற வரிகள் என்னை நிறைய யோசிக்க வைத்தது. இந்த விபத்தின்போது வெறும் இரண்டு நிமிடத்தில் என்னுடைய வாழ்க்கையை முடிந்திருக்கும். ஆனால், அது தான் வாழ்க்கை என்று இந்த பாடல் உருவான விதம் குறித்து அழகாக கூறினார் அருண்ராஜா காமராஜ்.

Advertisement