உடலை ஏற்றியது இந்த படத்திற்காக தானா..!அருண் விஜய்யின் புதிய ஆக்ஷன் அவதாரம்..!செம ரோல்..!

0
275
Arunvijay

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

Arun vijay

அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ்,ஹிந்தி தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், என்பவர் இயக்கவுள்ள ‘பாஸ்கர்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய்.

இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்க உள்ளார். இதற்காக கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வரும் அருண் விஜய், மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெறுகிறார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார்.