அருண் விஜய் மகன பாத்திருப்பீங்க , அவரது மகளை பார்த்துளீர்களா ? என்ன இப்படி வளந்துட்டாரு.

0
1988
arun
- Advertisement -

திரையுலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திரையுலகில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் அருண் விஜய்-க்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர்.

-விளம்பரம்-

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். 

இதையும் பாருங்க : பூர்ண கும்ப மரியாதையை அவமதித்தாரா கமல் – அர்ச்சர் அளித்த விளக்கம். வீடியோ இதோ.

- Advertisement -

அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.இதில் 9 வயதாகும் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அதுவும் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறாராம்.

படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார் இந்த படத்தின் இயக்குனர. இப்படி ஒரு நிலையில் நடிகர் அருண் விஜய் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய மூத்த மகளான பூர்வியும் இருக்கிறார். இதில் பூர்வி முன்பை பார்த்ததை விட நெடு நெடுவென வளைந்து இருப்பதை கண்டு பலரும் வியந்துபோய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement