பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.
நடிகர் விஜயகுமாருக்கு அனிதா, வனிதா, கவிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி, அருண்விஜய் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். இதில் அனிதவதா ஒருவரை தவிர மற்ற அனைவருமே நடிகர்கள்தான். இதில் அருண் விஜய் மட்டும் தான் ஒரு வெற்றிகரமான நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.
இதையும் பாருங்க : நான் காயப்பட்டு விட்டேன் – பிக் பாஸுக்கு பின் நிஷா வெளியிட்ட முதல் வீடியோ.
அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இதில் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருப்பதாக அருண்விஜய் டுவிட் செய்துள்ளார். அதுவும் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறாராம்.