தாலி விஷயத்தில் அசோக் செல்வனுக்கு கீர்த்தி போட்டுள்ள அன்புக்கட்டளை.

0
1332
- Advertisement -

திருமணத்திற்கு பிறகு அசோக் செல்வனும்- கீர்த்தி பாண்டியனும் அளித்திருக்கும் சுவாரசியமான பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்று தான். பாக்யராஜ்-பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா, சினேகா- பிரசன்னா, கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் ஆகியோர் வரிசையில் தற்போது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இணைந்து இருகிறார்கள். கோலிவுட் முழுவதும் இவர்களுடைய காதல் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் கதாநாயகனாக மாறினார். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடித்திருந்த படம் போர் தொழில். இந்த படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் காதல்:

இதனை அடுத்து தற்போது அசோக் செல்வன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும், இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம்:

மேலும், இந்த படத்தின் சூட்டிங் போது தான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்களாக கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டார்கள். செப்டம்பர் 13 ஆம் தேதி திட்டமிட்டபடியே அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

திருமண வரவேற்பு நிகழ்ச்சி:

இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பின் சமீபத்தில் தான் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் புது ஜோடிகளான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள்.

திருமணம் குறித்து சொன்னது:

அதில் கீர்த்தி பாண்டியன், எனக்கு தாலி கட்டும்போது மூன்று முடிச்சியும் நீயே போட வேண்டும் அசோக் செல்வனுக்கு நான் கட்டளை போட்டிருந்தேன். அதே போல் தான் அவரே எனக்கு மூன்று முடிச்சு போட்டார். தமிழ் மரபு முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்தை எங்கள் ஊரில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது என்று தங்களுடைய திருமணத்தில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனுடைய திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் வைரல் ஆகி வருகிறது.

Advertisement