Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘தங்கபுள்ள’ – அநீதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு – காளி வெங்கட்டின் உருக்கான வீடியோ.

0
639
Kalivenkat
-விளம்பரம்-

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காளி வெங்கட் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகி இருந்த படம் அநீதி. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உட்பட பல காளி நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

கதாநாயகன் குடும்பத்தை சிறு வயதிலே இழந்து தனியாக கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். பின் அவர் வளர்ந்ததும் சென்னையில் மீல் மங்கி என்ற நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்கிறார். அந்த வேலையில் அவர் தினமும் பல பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார். இதனால் இவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். இதனால் மன அழுத்தத்தின் உச்சிக்கு சென்ற கதாநாயகன் யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றுகிறது.

அநீதி படம்:

-விளம்பரம்-

இதனால் இவர் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். அப்போது தான் ஒரு வீட்டில் பாட்டிக்கு உதவி செய்யும் பணி பெண்ணாக கதாநாயகி தூஷாரா விஜயன் அறிமுகம் கிடைக்கிறது. இவரும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பின் இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்படுகிறது. அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் கதை. பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த அநீதி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து கடந்த 15ஆம் தேதி தான் ஓடிடியில் இந்த படம் வெளியாகி இருந்தது.

காளி வெங்கட் பதிவு:

இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். குறிப்பாக, நடிகர் காளி வெங்கட்டின் நடிப்பை பாராட்டி கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள். இந்த நிலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் காளி வெங்கட் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், அநீதி படத்தில் தங்க பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நன்றி சொல்லும் காளி வெங்கட் வீடியோ:

திக்கு முக்கு ஆடுகிற அளவுக்கு எல்லோரும் கொண்டாடுறீங்க. அதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த வசந்த் பாலன் சாருக்கும், சங்கர் சாருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா படத்திற்கும் மக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், இந்த படத்திற்கு அதிக ஆதரவு கொடுத்து இருக்கீங்க. சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு விமர்சனத்தையும் படிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

காளி வெங்கட் குறித்த தகவல்:

மேலும், ஃபோனில் அழைத்து நிறைய பேர் பாராட்டி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன திருப்பி கொடுக்கிறது என்றும் தெரியவில்லை என்று நெகழ்ச்சியாக பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் காளி வெங்கட். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news