புகழ் – பென்ஸி தம்பதிக்கு குழந்தை பிறந்தது – தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு புகழின் மிக உருக்கமான பதிவு

0
1156
pugazh
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் புகழ் நடித்திருந்தார்.

- Advertisement -

படங்களில் கலக்கும் புகழ் :

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாகஅருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். மேலும், இவர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் புகழ்.

புகழின் காதலி :

இப்படி ஒரு நிலையில் புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருந்த புகழ் மனைவி :

இதனால் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பாத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது திருமணத்தை முடித்தார் புகழ். திருமணத்திற்கு பின்னரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழ் மனைவி பேன்ஸி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை புகழே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

பென்ஸிக்கு பிறந்த பெண் குழந்தை :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் புகழ் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் புகழ் மனைவி பென்ஸிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள புகழ் ‘என் வாழ்விற்கு அர்த்தத்தை தந்தவளே! நம் வாழ்க்கை பாதையில் இருவராய் இருந்த நாம், மூவராய் பயணிக்கும் நாட்கள் மிக அருகில், நமக்கான இந்த பிரசவத்தில் எப்போதும் உனக்கு துணை நிற்பேன் பென்ஸி. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement