நடுக்கடலில் தத்தளித்த பிரபல நடிகர் – மீட்டெடுக்க திணறிய படக்குழுவினர்

0
563
Actor Ashok selvan
- Advertisement -

தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், சூது கவ்வும், பீட்ஸா-2 ஆகிய படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். தற்போது அடுத்த சில படங்களுக்காக முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால், என்ன பிரச்சனையோ தெரியவில்லை படம் பாதியில் கைவிடப்பட்டது.

Actor Ashok selvanஅதன் பின்னர் மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் படத்தில் கமிட் ஆனார் அசோக். இந்த படத்தின் தலைப்பு ஆக்சிஜன். இந்த படத்திற்காக ஒரு த்ரில்லான காட்சி பாண்டிசேரியில் உள்ள கடலில் எடுக்கப்பட்டது.

சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென வந்த ஒரு ராட்சச அலையால் தூக்கி வீசப்பட்ருக்கிறார் அசோக் செல்வன். இது குறித்து அவர் கூறியதாவது,
அந்த கடல் பற்றி எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை, நாங்கள் அங்கு சூட்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு அலை என்னை தூக்கி வீசியது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தன் காதலனுக்காக நயன்தாரா எடுத்த முயற்சி – பயன் கிடைக்குமா ?

உடனடியாக எனக்கு உதவ படக்குழு வந்தது. ஆனால் அலைகள் என்னை சுருட்டிபோட்டது. அதனால் அவர்களால் என்னை உடனடியாக மீட்கமுடியவில்லை. பின் ஒருவழியாக என்னை கஷ்டப்பட்டு மீட்டனர். இல்லை எனில் நான் காலி தான் என திகிலாக நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி அவர் கூறியுள்ளார்.

Advertisement