வேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..!இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..!

0
1265
aswin
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாடலான ‘தூக்கு துரை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

-விளம்பரம்-

இந்த பாடல் வெளியான போதே ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது மட்டுமல்லாமல் யூடுயூபிலும் பல்வேறு சாதனைகளை புரிந்து. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘வேட்டி கட்டு’ என்ற இரண்டாவது பாடல் நேற்று (டிசம்பர் 15) மாலை 7 மணிக்கு வெளியானது.

- Advertisement -

ரசிகர்கள் சிறிதும் எதிர்பாராத இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று யூடியூபில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலை கேட்ட சில மணி நேரத்திலேயே இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் இந்த பாடலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதிலும் எப்படி தெரியுமா அஸ்வின் வேட்டி சட்டையில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டு, என்ன ஒரு கொண்டாட்டமான ஒரு பாடல் அஜித் சார் லுக் வேற லெவல் என்று பதிவிட்டுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement