திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் ? உண்மை நிலவரம் இதோ..!

0
312

நடிகர் கமல் அடுத்து ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுநாள் வரை வடமாநிலத்தில் பலமாக இருந்து வந்த பா ஜ க அணி சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பலம் கூடியுள்ளது என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

அதே போல தொடர்ந்து பா ஜ க வை எதிரித்து வரும் தி மு க அணி அடுத்த தேர்தலில் காங்கிரஸ்சுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரஜினி இதுநாள் வரை பா ஜ கவை மறைமுகமாக ஆதரித்து வந்தார் என்று சில பேச்சுகளும் நிலவி வந்தது. 

அதே போல நேற்று ஒரு தனியார் செய்தி தொலைகாட்சியில் நடிகர் கமல் திமுகவில் இணைந்துவிட்டார் என்ற செய்தி வெளியிட்டனர். இந்நிலையில் நடிகார் கமல் அடுத்த தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையப்போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இதனை கமல் முற்றிலும் மறுத்துள்ளார். 

இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் இதுகுறித்து விளக்கமித்ததில், வரும் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிடும் என்றும், திமுக கூட்டணியில் இணையப்போவதாக வந்த செய்தி பொய்யானது. மக்கள் நீதி மையத்தை பார்த்து பயம் உள்ளவர்கள் இது போன்ற பொய்யான செய்தியை கிளப்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.