நமக்கு தேவையானதை நாம தான் அடிச்சு வாங்கனும்.! மிரட்டலாக வெளியான அசுரன் ட்ரெய்லர்.!

0
1151
Asuran

வடசென்னை படத்திற்குப் பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்த மஞ்சு, நடிகர் திலீப்பைக் காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.

வட சென்னை ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், வடசென்னையை மூன்று பாகமாக எடுக்க உள்ளோம். ஆனால் அதற்கு முன்னதாக நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். பிறகு அசுரன்; என்ற தலைப்பையும் தனுஷ் வெளியிட்டார்.

- Advertisement -

இப்படத்தில் பிரபல காமெடி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸிஸின் மு கென் கருணாஸ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் இருந்து நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-

ஜி.வி.பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் – ஜி.வி கூட்டணி இணைந்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது

Advertisement