பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் சேதுபதி மீது புகார் எழுதியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 71 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். இந்த வாரம் வி.ஜே விஷால் தான் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்லின், பவித்ரா, அருண், ரஞ்சித், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, அன்சிதா, ராணவ், ராயன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.

தீபக் செய்த வேலை:
அதோடு நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி மீது புகார் எழுந்து இருக்கும் தகவல் தான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகரும், பிக் பாஸ் போட்டியாளரும் ஆன தீபக் தவறான கருத்தை கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=u6Ehvajxrug
விஜய் சேதுபதி மீது புகார்:
அதை டிவியில் அப்படியே ஒளிபரப்பு செய்திருந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த டைல்ஸின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காரைக்குடி காவல் ஆணையத்தில் நிகழ்ச்சியில் தவறாக பேசிய நடிகர் தீபக், அதனை ஒளிபரப்பிய விஜய் டிவி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். இதை அடுத்து சேனல் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆத்தங்குடி டைல்ஸ் குறித்த தகவல்:
ஆத்தங்குடி டைல்ஸ் என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் செய்யப்பட்ட தரை ஓடுகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமம் தான் ஆத்தங்குடி. இங்கு இரண்டு பக்கமுமே டைல்ஸ் கடைகளே இருக்கும். உலகப் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்களை இங்குள்ள மக்கள் குடிசை தொழிலாகவே செய்து வருகிறார்கள். இயந்திரங்களின் உதவி இல்லாமல் கைகளில் தான் இந்த டைல்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டைல்ஸ் தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.






