எல்லாம் பணத்திமிரு.! மனைவி பதிவிட்ட பதிவால் அட்லீயை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

0
73055
Atlee-Priya
- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லி. இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இதுவரை அட்லீ கதைகளை திருடுவபவர் என்று விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது அட்லி பணத்திமிர் கொண்டவர் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

-விளம்பரம்-

அட்லியின் மனைவியான பிரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் பல்வேறு சீரியல் தொடர்களில் நடித்து வந்தபிரியா , ஜோடி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றார். மேலும், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் பிரியா.

இதையும் பாருங்க : சேரனுக்கு இது தேவையா.! மிக மட்டமாக இருக்கு.! வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்.! 

- Advertisement -

ஆனால், இவர் அட்லீயை திருமணம் செய்துகொண்ட பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அட்லி கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் பிரியாவும் கலந்து கொள்வார். மேலும், பல்வேறு பிரபலங்களுடன் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலை தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் ப்ரியா. இந்த நிலையில் இவர் தனது நாய்க்கு பிறந்த நாளை கொண்டாட, இதுதான் தற்போது அட்லியை பலரும் விமர்சிப்பதற்கு காரணமாகியுள்ளது.

-விளம்பரம்-

அட்லியின் வீட்டில் பக்கி என்ற நாயை வளர்த்து வருகின்றனர். இதற்கு கடந்த 6ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தனது செல்லப் பிராணியான நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படத்தை பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட பலரும் பணத்திமிரில் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்றும், நாய்க்கு கேக் வெட்டுவதற்கு பதிலாக பசியால் வாடும் மனிதர்கள் யாருக்காவது ஏதாவது உதவி செய்யலாமே என்று கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement