கதைய காப்பி அடிப்பீங்க..! இத கூடவா காப்பி அடிக்கிறது..! அட்லீயை அசிங்கப்படுத்திய நெட்டிசன்.! ஆதாரம் இதோ.!

0
232

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஒரு ‘காபி கேட்’ என்று அழைக்கப்பட்டாலும், இவர் எடுக்கும் படங்கள் எப்படியோ ஹிட் அடித்து விடுகின்றது. தமிழ் சினிமாவில் வந்த பழைய கதைகளை சுட்டு அதில் சில தனக்கு தெரிந்த தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் அட்லீ. ஆனால், சமீபத்தில் இயக்குனர் ஷங்கருக்கு ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்த அட்லீ ட்விட்டர் வாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

Atlee

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த இயக்குனர் அட்லீ , வருடத்திற்கு ஒருமுறை ஆசிரியர் தினம் வருகிறது. ஆனால் நீங்கள் கற்றுக்கொடுத்தது தினந்தோறும் எனக்கு உதவுகிறது. நான் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சங்கர் சார் என்று பதிவிட்டிருந்தார்.

இயக்குனர் அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனால் அதனை மதித்து இயக்குனர் ஷங்கரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால், இயக்குனர் அட்லீ பதிவிட்டிருந்த அதே பதிவை மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடபட்டிருந்தது.

ட்விட்டரில் வைரலாக பரவிய இந்த விடயத்தை கண்ட டிவீட்டர் வாசிகள், நெக்ஸ்ட்இன்கெரிய என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வாழ்த்தை தான் அப்படியே காப்பியடித்து தனது பக்கத்தில் போட்டுக்கொண்டுள்ளார் என்று தெரியவந்ததும், படத்தை தான் காப்பி அடிப்பீர்கள் என்று பார்த்தல் இதை கூட விட்டு வைக்கலையா என்று அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.