அட்லீயின் அடுத்த படத்துக்கு இவர் தான் ஹீரோவா ? யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே

0
8695
Director Atlee

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் நம் கண் முன்னே மீண்டும் ஒரு மௌன ராகத்தை நிறுத்தியவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த இவர் அந்த படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார் அந்த படம் பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது.

pavan kalyaan and allu arjun

- Advertisement -

தெறி படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் 120 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 250 கோடி வசூலை அளித்து சாதனை படைத்தது. இந்நிலையில் அட்லியின் அடுத்த படைப்பில் நடிக்க போவது யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அட்லியின் அடுத்த படைப்பில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் சமீபத்தில் நடித்த சாஹோ படத்திற்கு பிறகு வேறு ஒரு தெலுகு படத்தில் கமிட்டாகிவிட்டார் ,அதனால் அவர் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று பேச்சுக்கள் பரவிவருகிறது.

இதனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அடுத்து மாஸ் ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் அல்லது அல்லு அர்ஜூன் இவர்கள் இருவரில் ஒருவரை வைத்து அட்லீ படம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அல்லு அர்ஜுன் நா பெரு சூர்யா நா ஊரு இந்தியா என்ற படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்துள்ள படம் வரும் மே மாதம் வெளியாகியுள்ளது.ஆனால் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருக்கும் பவன் கல்யாண் அட்லியின் படத்தில் நடிப்பார் என்று கொஞ்சம் எதிர்பார்க்கபடுகிறது

-விளம்பரம்-
Advertisement