சம்பவம் லோடிங், விஜய் அண்ணா Ok சொல்லிட்டாரு, மாஸ் கூட்டணியை அமைக்க காத்திருக்கும் அட்லீ.

0
366
- Advertisement -

இயக்குனர் அட்லீ இயக்கும் புது படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து இருந்தார்கள். ஆனால், இந்திய அளவில் இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

அதோடு நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்நிலையில் அட்லீ இயக்கும் புது படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பேட்டியில் அட்லி, தளபதி விஜய்- ஷாருக்கான் இருவரையும் இணைத்து படம் எடுக்க இருக்கிறேன். இது என்னுடைய அடுத்த திரைப்படம் ஆக கூட இருக்கும்.

-விளம்பரம்-

அட்லீ பேட்டி :

என்னுடைய அடுத்த படத்திற்கான சரியான கதை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் கூறியிருந்தார். இதனை எடுத்து தற்போது விஜய்- சாருக்கான் இருவருமே படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக அட்லி கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருந்தது.

அட்லீ இயக்கும் புது படம் :

இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முடித்து விஜய் அவர்கள் அட்லி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement