தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.
அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இதையும் பாருங்க : நான் பெயில் ஆயிருக்கேன், கேவலமான மார்க் வாங்கி இருக்கேன் – தொடரும் நீட் தற்கொலைகள், சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ.
இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இதுபோன்ற கதை ஒன்று நெட்ப்ளிக்ஸ்ஸில் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளிவந்துள்ளது. அந்த கதையின் இந்திய உரிமையை சாருக்கான் வாங்கி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
மேலும், அந்தக் கதையைத் தான் அட்லி தனது தன்னுடைய பாணியில் டெவலப் செய்து ‘லயன்’ என்ற தலைப்பில் திரைப் படமாக இயக்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.