நான் பெயில் ஆயிருக்கேன், கேவலமான மார்க் வாங்கி இருக்கேன் – தொடரும் நீட் தற்கொலைகள், சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ

0
612
surya
- Advertisement -

நீட் என்ற தேர்வு தமிழகத்தில் தொடங்கியதிலிருந்தே பல மாணவர்கள் மன அழுத்தத்திலும், சில பேர் தற்கொலை செய்தும் கொள்கிறார்கள். இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று நடிகர் சூர்யா அவர்கள் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பயந்து சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதனையடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் அதே கோரிக்கையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பது, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. மாணவர்கள் அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

- Advertisement -

உங்களுக்கு கடந்த மாதம் இருந்த வேதனை, கவலை எல்லாம் இந்த மாதம் இருக்கிறதா?: யோசித்துப் பாருங்கள். நிச்சயம் எல்லாமே குறைந்து இருக்கும் அல்லது போயிருக்கும். தேர்வு என்பது உங்கள் உயிரோட பெரிய விஷயமில்லை. உங்கள மனதுக்கு கடினமாக இருந்தால் உங்களுக்கு பிடித்தவர்கள் அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியரை என யாரிடமாவது மனது விட்டுப் பேசுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடும். தற்கொலை வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நான் எல்லா பரீட்சையிலும் தோல்வியடைந்து குறைவான மதிப்பெண்களை பெற்று இருக்கிறேன். மதிப்பெண் தேர்வு மட்டும் வாழ்க்கை இல்லை.

இந்த உலகில் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்து கொள்ள மற்றும் நேசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். தேர்வு, மதிப்பெண் மட்டும் உங்கள் வாழ்க்கையையும், தகுதியையும் நிர்ணய காது என்று கூறியுள்ளார். தற்போது இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. மேலும், சூர்யாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement