திரிஷாவின் பதிவிற்கு முன், திரிஷாவின் பதிவிற்கு பின் – அந்தர் பல்டி அடித்த அதிமுக பிரமுகர்.

0
580
- Advertisement -

கூவத்தூர் அதிமுக விவகாரம் தொடர்பாக ஏவி ராஜு அந்தர் பல்டி அடித்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக,அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 100 பேர் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக தகவல் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஏவி ராஜு பேட்டியில் கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

- Advertisement -

கூவத்தூர் சர்ச்சை:

அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்திருந்தார். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க. நான் என்ன சொல்றது என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் கோலிவுட் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து பிரபலங்கள் பலருமே ஏ வி ராஜூவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

திரிஷா கண்டனம்:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷாவும் கண்டனத்தை எழுப்பி இருக்கிறார். அதில் அவர், ராஜுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

ஏ வி ராஜு பேட்டி:

இது குறித்து இனி என் வழக்கறிஞர்கள் குழு பார்த்துக் கொள்வார்கள் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஏவி ராஜு, திரிஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார் என்று கூறினேன். எந்த நடிகையும் குறிப்பிட்டு பேசவில்லை. நான் எப்பொழுதும் அவ்வாறு பேசுபவன் கிடையாது. என்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டிருக்கிறது என்று அந்தர்பல்டி அடித்து பேசி இருக்கிறார்.

ஏ வி ராஜு மீது புகார்:

இப்படி இவர் பேசியதற்கு இயக்குனரும் நடிகருமான சேரன் அவர்கள் ஏவி ராஜுக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். இவரை அடுத்து காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் ஏவி ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Advertisement