சினிமாவிலேயே பணக்கார நடிகை, கணவர் செய்த கொடுமை, கடைசியில் குடிக்கு அடிமையாகி இறந்த சோகம்.

0
514
- Advertisement -

இந்தியாவில் பணக்கார நடிகையாக இருந்து மது பழக்கத்துக்கு அடிமையாகி பல கொடுமையை அனுபவித்து இறந்து போன பிரபல நடிகை பற்றிய தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மீனாகுமாரி. இவர் தன்னுடைய 4 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டார். தன்னுடைய விடாமுயற்சியும் கடின உழைப்பின் மூலமாக தான் இவர் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்துக்கு வந்தார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் மிகவும் பணக்கார நடிகைகளில் ஒருவராகவும் இவர் இருந்தார். இவர் 1950களில் மிகவும் பிரபலம் அடைந்திருந்தார். அந்த காலகட்டத்தில் பிரபலமான பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அப்போது புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களில் கூட பணிபுரிந்து இருந்தார். இருந்தாலும் ஒரு இயக்குனர் இவரிடம் ஒரு முறை தவறாக நடந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

மீனாகுமாரி குறித்த தகவல்:

இதை மீனாகுமரி கண்டித்து எச்சரிக்கையும் விடுத்தார். இதை மனதில் வைத்துக் கொண்ட அந்த இயக்குனர் அவரை பழிவாங்க தன்னுடைய ஒரு படத்தில் மீனாகுமாரி நடிக்கும் போது ஒரு காட்சியில் ஹீரோ அவரை 31 முறை அடிப்பது போன்ற சீனை வைத்து இருந்தார். அப்போது உண்மையிலேயே மீனா குமாரியை அந்த ஹீரோ அடித்தும் விட்டார். இப்படி பல பிரச்சினைகள் இவருடைய வாழ்க்கையில் வந்தாலும் தன்னுடைய கேரியரை விடாமல் சாதித்து வந்தார்.

மீனாகுமாரி திருமணம்:

அது மட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே அதிகமான சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரையும் எடுத்திருந்தார் மீனாகுமாரி. இவர் சொகுசு கார்கள், பங்களா என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். பின் தன்னுடைய குடும்பத்தினரை எதிர்த்து இவர் இயக்குனர் கமல் அம்ரோஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இருவருடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல மீனா குமாரியை கமல் அம்ரோகி என்பவர் அடித்து உதைத்து தினம் தினம் சித்திரவதை செய்திருந்தார்.

-விளம்பரம்-

குடிப்பழக்கத்து அடிமையாக காரணம்:

இதனால் மனம் வெறுத்துப் போன மீனா குமாரி அவரை விட்டுப் பிரிந்து தன்னுடைய சகோதரி உடன் வசித்து வந்திருந்தார். அதோடு கம்மல் தன்னுடைய கணவர் கொடுத்த கொடுமைகள் தாங்க முடியாததால் இவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும், அளவுக்கு அதிகமான போதைக்கு மீனா குமாரி அடிமையாகி இருந்தார். இதனால் இவருக்கு பல நோய்கள் வந்தது.

மீனாகுமாரி இறப்பு:

சினிமாவில் வெற்றிகண்ட மீனா குமாரி தன்னுடைய குடும்ப வாழ்க்கையினால் சந்தோஷத்தை இழந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முதியோர் இல்லத்தில் கவனிப்பின்றி உயிரிழந்திருந்தார். கோடீஸ்வரி ஆக வாழ்ந்தவர் இறக்கும்போது வறுமையில் கடன் வாங்கி வைத்திருந்திருந்தார். இவருடைய இறப்பு பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

Advertisement