அட, அயோத்தி படத்தில் நடித்த அம்மாவும் பொண்ணும் நிஜத்திலும் இப்படி ஒரு உறவினர்களாம் – அயோத்தி ப்ரீத்தி அளித்த பேட்டி.

0
791
PreethiAsrani
- Advertisement -

தமிழ் மொழி கற்றுக் கொண்ட காரணம் குறித்து அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக கலக்கி கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது சசிகுமார் நடித்துள்ள படம் “அயோத்தி”. இப்படத்தை டிரைன்ட் ஆர்ட்ஸ் தயாரித்து இருக்கிறது. இயக்குனர் மந்திரமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. இந்த படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்திருக்கிறது. இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால், இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியா மீது அதிக ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்திருக்கிறார். பின் சின்னத்திரை சீரியல்களில் நுழைந்தார். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பிரீத்தி குறித்த தகவல்:

அதற்குப்பின் தமிழில் மின்னலே என்ற சீரியலில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தார். மேலும், இவர் தெலுங்கு மொழியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதல் முறையாக அயோத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார் பிரீத்தி. மேலும், இவர் பிற மொழி பேசும் மாநிலத்தவராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் நான் ஸ்கூல் படிக்கும்போதே ஹைதராபாத்திற்கு வந்து விட்டோம்.

பிரீத்தி அளித்த பேட்டி:

அயோத்தி படத்தில் எனக்கு அம்மாவாக நடித்த அஞ்சு அஸ்ராணி எனக்கு நெருங்கின சொந்தம் தான். அவர்கள் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். எனக்கு சின்ன வயதிலேயே அஞ்சு அக்காவும் நானும் ஒன்னாக தான் சுத்துவோம். அவர்கள் மூலம் தான் சினிமா பத்தி எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது. பத்தாவது முடித்த உடனே நான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினேன். ஸ்கூல், காலேஜ் படித்துக் கொண்டே நடிக்கவும் செய்தேன். இதுவரைக்கும் நான் பத்து படங்களில் நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

பிரீத்திக்கு தெரிந்த மொழிகள்:

எனக்கு பலதரப்பட்ட மொழிகளில் நடிக்கணும் என்பது தான் ஆசை.. இதனாலே நான் புது புதிதாக மொழிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறேன். நடிப்புதான் என்னுடைய கேரியர் என்று ஆன பிறகு தமிழ் மொழியில் நடிக்காமல் இருந்தால் நன்றாகவா? இருக்கும். போன் ஆப் மூலமாகவே நான் தமிழ் கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி உட்பட எட்டு மொழிகள் தெரியும். வருஷம் வருஷம் ஒரு புது மொழியை கத்துக்கணும் என்ற கொள்கையை உறுதியோடு கடைப்பிடிக்கிறேன். மேலும், அயோத்தி படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு கிட்டத்தட்ட 40 பேரை ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணி இருந்தார்கள். ஆனால், யாருமே செலக்ட் ஆகவில்லை.

பிரீத்தியின் ஆசை:

அந்த படத்தில் நான் வட இந்திய பெண்ணாக நடித்திருப்பேன். அதற்கு ஏற்ற மாதிரி என்னுடைய முக சாயலும் இருந்தது எனக்கு பிளஸ் ஆக அமைந்தது. அயோத்தி படத்தை சென்னையில் பார்த்தேன். படம் முடிந்ததும் ரசிகர்களிடம் பேசினேன். ஒவ்வொருத்தரோட பாராட்டுகளும் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அதேபோல் நானும் என்னுடைய அக்காவும் ஒன்றாக நடித்தது இன்னும் சந்தோஷம். அவர்கள் எனக்கு நிஜத்திலும் அம்மா மாதிரி தான். அதே பாண்டியில் தான் நாங்கள் சினிமாவில் நடித்தோம். மேலும், எனக்கு பேட்மிட்டன், கிட்டார், சிங்கிங், டான்ஸ் என பல துறைகளில் ஆர்வம் இருக்கிறது. டிராவல் பண்ண ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கணும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இப்போதைக்கு என் உலகம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிப்பது தான் என்று கூறி இருந்தார்.

Advertisement