கனா வெற்றி விழாவில் சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

0
556
- Advertisement -

சமீபத்தில் சிவகார்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண் ராஜா காராஜா இயக்கிய ‘கனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ‘இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறியதைத்தான் உண்மையான வெற்றியாக நான் பார்க்கின்றேன்.

- Advertisement -

பல திரைப்படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். ஆனால் இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது பேச்சு குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும்ஐஸ்வர்யா ராஜேஷ் , “நான் விளையாட்டாகத் தான் பேசினேன். யாரையும், எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. எப்போதும் நான் யாரையும் காயப்படுத்த விரும்பமாட்டேன். அனைத்து படங்களுமே வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். ஒரு படம் எடுப்பதில் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுடைய பேச்சு யார் மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement