நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார்.தனது பயணத்தை சன் டிவி தொகுப்பாளராக ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க முட்டை படத்திற்கு முன்பு சிறு சிறு கதா பாத்திரத்தில் நடித்தார் அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ரம்மி படத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் பலருக்கும் பரீட்சயமில்லா நடிகையாக விளங்கி வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் பாருங்க : படு மோசமான ஆடையில் போட்டோ ஷூட்.! கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.!
அதன் பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது மெய் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தன்னை ஏமாற்றியது குறித்து பேசியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த விழாவில் பேசிய அவர், மெய் திரைப்படம் மருத்துவத் துறையில் இருக்கும் பல மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நானும் ஒரு பிரபல மருத்துவமனையில் ஏமாற்றப்பட்டு உள்ளேன் ஒரு முறை எனக்கு சாதாரண ஜுரம் ஏற்பட்டதால் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தேன். அவர்கள் நாள் முழுவதும் என்னை அங்கேயே அனுமதித்து வைத்திருந்தனர். மேலும் அதற்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயை கேட்டனர். என்னால் ஒரு லட்சம் ரூபாயை கொடுக்க முடியாது என்பது இல்லை ஆனால் இதற்காக நான் ஒரு சாதாரண ஜுரத்திற்கு அவ்வளவு அளிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு கேள்வியாக இருந்தது. மேலும், ஒரு ஜுரத்திற்கு ecg எல்லாம் எடுத்தார்கள் என்று கூறியுள்ளார்