அடுத்து வாரம் லாஸ்லியா காப்பற்றப்படுவாரா.! என்ன ஒரு தந்திரம் டா சாமி.!

0
5741
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது இந்த டாஸ்கில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா. 

இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல டாஸ்க் முடிந்த நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் முடிவு செய்து கொண்டிருந்தனர். இதில் போட்டியாளர்கள் சிலர் லாஸ்லியா, சேரன், சாண்டி பெயரை கூறியிருந்தனர்.

- Advertisement -

இறுதியாக சிறப்பாக டாஸ்கை செய்த பெயர்களில் லாஸ்லியா மற்றும் சாண்டியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இதுவரை ஒருமுறை கூட சிறப்பான போட்டியாளர் பெயரில் இடம்பெறதா லாஸ்லியா இந்த வாரம் சிறந்த போட்டியாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால், உண்மையில் தர்ஷன், முகெனைவிட லாஸ்லியா சிறப்பாக ஒன்றும் டாஸ்கை செய்யவில்லை. இறுதியாக சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரும் சிறந்த போட்டியாளர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இவர்கள் மூவரும் அடுத்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

என்றும் இல்லா திருநாளாக லாஸ்லியா இந்த வாரம் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்தே அடுத்த வாரம் தலைவராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கண்டிப்பாக சேரனும் சாண்டியும் கண்டிப்பாக லாஸ்லியாவிற்கு தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அடுத்த வார நாமினேஷனிலிருந்து லாஸ்லியா காப்பற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement