விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், கார்த்திகாவின் வீட்டிற்கு சென்று சோழனின் ரிசப்ஷனுக்காக அழைத்தார். கார்த்திகா ரொம்பவே சோகமாக இருந்தார். கார்த்திகாவின் அம்மாவும் ஏதோ பிரச்சனை வேதனையில் இருந்தார்கள். ஆனால், அதை இருவருமே வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். சேரனுக்கும் கார்த்திகாவின் செயல்களை கண்டு சந்தேகம் வருகிறது. ஆனால், கார்த்திகா ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சோழனுடைய ரிசப்ஷன் நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரிசப்ஷனுக்கு மனோகர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ரிசப்ஷனுக்காக அய்யனார் குடும்பத்தில் எல்லோருமே தயாராகி கிளம்பினார்கள். நடேசன் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று சோழன், பாண்டியன் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் நடேசன் கடுப்பானார். உடனே நடேசன், நான் பங்சனுக்கு வரவில்லை என்றார். பின் சேரன் தன்னுடைய அப்பாவை சமாதானம் செய்தார்.
அய்யனார் துணை:
அதற்குபின் எல்லோருமே கிளம்பி நிலாவின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அங்கு நிலாவின் அப்பா அம்மா எல்லோருமே நிலாவிற்காக அய்யனார் குடும்பத்தை கவனித்தார்கள். இருந்தாலும் நிலாவிற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? என்று பயப்பட்டார். பின் நிலாவை, அவர் அம்மா தனியாக அழைத்து சென்று விட்டார். அய்யனார் குடும்பத்தை மனோகர் ரொம்ப நக்கலாகவும் ஏளனமாகவும் பேசி இருந்தார். ஆனால், அது எதுவும் கண்டு கொள்ளாமல் அய்யனார் குடும்பம் அமைதியாக இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோகர், சேரன் குடும்பத்தை ஒரு ஸ்டோரூமில் தங்க சொல்கிறார். சேரன் எதுவும் சொல்லாமல் அங்கேயே தங்குவதற்கு ஒத்துக்கொள்கிறார். இதையெல்லாம் கவனித்த சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். நிலா, சோழன் குடும்பம் தங்கி இருக்கும் இடத்தை பார்த்து கொந்தளிக்கிறார். பின் இதைப்பற்றி தன்னுடைய அப்பாவிடம் நிலா கேட்கிறார். மனோகர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலும் நிலாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின் மறுநாள் காலையில் ஒரு வேலை ஆட்களைப் போலவே தேன்மொழி சோழன் குடும்பத்தை நடத்துகிறார்.

சீரியல் ட்ராக்:
அதோடு அவர்கள் எல்லாம் பின்பக்கம் உள்ள பாத்ரூமில் பயன்படுத்த சொல்கிறார். சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் அவர்களுக்கு ஒரு டீ கூட போட்டுக் கொடுக்காமல் தேன்மொழி இருக்கிறார். இதை எல்லாம் கவனித்த நிலா, தன்னுடைய அம்மாவிடம் சண்டை போடுகிறார். சோழன் குடும்பத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் நிலாவே செய்கிறார். இதை கவனித்த நிலாவின் அம்மாவிற்கு கோபம் தான் வருகிறது






