விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் லட்சுமி நெஞ்சுவலி வந்தது போலவே நடித்தார். மலரும் தன்னுடைய மாமியாருக்கு உதவி செய்தார். ஆனால், மதி அதை கண்டுகொள்ளவே இல்லை. லட்சுமி நடிக்கிறார் என்று மலருக்கும் தெரியும். இருந்தாலும் மலர் தண்ணி வேண்டுமா, மாத்திரை வேண்டுமா, ஹாஸ்பிடல் போகலாம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து மாமனார் வந்து விட்டார். மதியை பற்றி ரொம்பவே தப்பு தப்பா லட்சுமி பொய் சொன்னார். உடனே கொந்தளித்த மாமனார், சுரேஷிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மதி அமைதியாக தான் இருந்தார்.

பாக்யராஜ்க்கு போன் செய்த மலர், வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். பாக்கியராஜ் கிளம்பி வீட்டிற்கு வந்தார். லட்சுமி நெஞ்சு வலி வந்தது போல நடித்துக் கொண்டு மதியை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சுரேஷ் வீட்டிற்கு வந்தார். சுரேசை பார்த்தவுடன் லட்சுமி ஓவர் ஆக்டிங் செய்தார். அதோடு மதி சொல்லாத வார்த்தை எல்லாம் சொன்னார். சுரேஷிற்கு கோபம் தான் வருகிறது. மதி நடந்ததை சொல்ல வந்தார். ஆனால், அதை சுரேஷ் காது கொடுத்து கூட கேட்கவில்லை.
அழகே அழகு:
வீட்டில் பெரிய கலவரத்தையே லட்சுமி செய்து கொண்டிருந்தார். அதற்கு அவர் கணவரும் உடந்தையாக இருந்தார். லட்சுமி, மதியின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார்கள். மதியின் அப்பா-அம்மாவை பார்த்து ரொம்ப மோசமாகவும் அவமானப்படுத்தியும் பேசி இருந்தார்கள். மதியால் எதுவும் பேச முடியவில்லை. பின் மதியின் பெற்றோர்கள் அறிவுரை சொன்னார்கள். மதி சொல்வதை யாரும் கேட்கவே இல்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதியின் பெற்றோர்கள், இந்த வீட்டில் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் வாழனும். எதிர்த்து பேசாதே. எங்களுடைய நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். மதி, நீங்கள் என்னை மறந்து விடுங்கள். இங்கு யாரு கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று சொல்லி விடுகிறார். அதற்குப்பின் தங்கராஜ், இந்த பிரச்சனைக்குள் வந்துவிடுகிறார். அவர் மதியின் அப்பா-அம்மாவை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அதற்கு பின் மதியை தனியாக அழைத்து அறிவுரை எல்லாம் சொல்கிறார். ஆனால், மதி அதை பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:
பின் தங்கராஜ், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார். சுரேஷ், எது வேணாலும் நடந்திருக்கட்டும். நீ என்னுடைய அப்பா, அம்மாவிடம் மன்னிப்பு கேளு என்று சொல்கிறார். மதி, நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்யாமல் யாரிடமும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். பாக்யராஜ், மலர் எல்லோருமே மதியை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். ஆனால், மதி முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் கொந்தளித்த சுரேஷ், இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க தேவையில்லை என்று மதியை பிடித்து வெளியே தள்ளுகிறார். மதியும் வீட்டிற்கு வெளியே செல்கிறார். ஆனால், மதி எங்கும் போகாமல் வீட்டு திணையில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதை கவனித்த லட்சுமி மீண்டும் தன்னுடைய மகனிடம் புகார் பண்ணுகிறார். ஆனால், சுரேஷ் வேலை இருக்கிறது என்று அங்கிருந்து சென்று விடுகிறார்.






