அழகி படத்தில் வந்த குட்டி பார்த்திபனா இது ? எப்படி ஆகிட்டார் பாருங்க. இதனால் தான் படத்தில் நடிக்கவில்லையாம்.

0
943
Azhagi
- Advertisement -

-விளம்பரம்-

இதனால் தான் என்னால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார் அழகி பட நடிகர் சதீஷ். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப் படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இந்த படம் பெற்றது.

- Advertisement -

மேலும், அழகி படத்தில் சிறு வயது நந்திதா தாஸுக்கு காதலனாக, சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ். இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒளியிலே தெரிவது’ என்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் சேரன் இயக்கி நடிப்பில் வெளி வந்த ‘சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் சேரனின் தம்பியாக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சதீஸ் நடித்து இருந்தார்.

சதீஸ் அளித்த பேட்டி:

பின் புதுமுக இயக்குநர் எஸ்.கே. மதி இயக்கத்தில் “கூட்டாளி” என்ற படத்தில் ஹீரோவாக சதீஸ் நடித்து இருந்தார். ஆனால், திடீரென்று என்ன காரணம் என்று தெரியவில்லை படம் நின்று விட்டது என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு இவர் என்ன ஆனார்? என்று கூட பல பேருக்கு தெரியவில்லை. இந்நிலையில் சதீஸ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் சினிமா குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

அழகி படம் அனுபவம்:

அழகி படத்தில் வந்த ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதோடு இந்த பாடல் எனக்கான பாடல் என்று முதலில் தெரியாது. இந்த பாடலை டேப் ரெக்கார்ட்டில் நான் அடிக்கடி போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்போது இயக்குனர் சார் ஏன்டா கேட்டு கேட்டு டேப் ரிக்கார்டர் தேய்ந்து போய் விடப் போகிறது என்று கிண்டல் அடிப்பார்.

படம் நடிக்காமல் போன காரணம்:

அதற்குப் பிறகு தான் அந்தப் பாடல் முழுவதும் எனக்காக வைத்தது என்று தெரிந்தது. அந்த பாடல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இந்த படத்தின் போது நான் 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் இந்த படத்திற்காக ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர்கள் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்கள் என்னை பார்த்தவுடன் இந்த கதாபாத்திரத்துக்கு இவந்தான் சரியாக இருப்பார் என்று சொல்லி நடிக்கச் சொன்னார்கள். படம் நடித்த பிறகு எனக்கு எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு வீட்டில் நடித்தது போதும் படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்லி விட்டார்கள்.

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சதீஸ்:

அதனால் தான் நடிக்க முடியாமல் போனது. இன்னொரு பக்கம் எனக்கான கதாபாத்திரம் சரியாக வந்து இருந்திருந்தால் நடித்திருப்பேன். கதையை நான் குறை சொல்லவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு பொருந்தவில்லை. அதனால் தான் என்னால் தொடர முடியவில்லை. இப்பவும் நிறைய படங்களில் நடிக்க கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் கதைகளை கேட்டு அதை எனக்கு ஏற்ற மாதிரி பண்ணி தர சொல்லி இருக்கிறேன். இப்போது இரண்டு படங்களில் பேசியிருக்கிறேன். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை கூடிய விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement