ஊரடங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி வீட்டில் என்ன செய்கிறார் பாருங்க. அவரே வெளியிட்ட வீடியோ.

0
908
rajamouli
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’. இது தான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-
Two years of Bahubali: Lessons its success taught the industry ...

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி’, நித்தினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’ என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு திரையுலகுடன் நம் திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நான் ஈ, பாகுபலி 1 & 2’ ஆகிய படங்களை தமிழிலும் வெளியிட்டார்.

இதையும் பாருங்க : இளசுகளை ஈர்க்க பிகில் நடிகை கிளாமருக்கு இவங்க, வம்பிழுக்க இவங்க. இது தான் பிக் பாஸ் 4 லிஸ்டா?

- Advertisement -

இந்த மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். ‘பி தி ரியல்மேன்’ சேலஞ்ச் (#BeTheREALMANChallenge) என்ற ஹேஸ் டேக்குடன் ஸ்டேட்டஸ் போட்டிருக்கும் அந்த வீடியோ பதிவில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவரது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : அசின் நடித்த முதல் படத்தில் நடித்துள்ள பார்த்திபன். இதோ அவர் நடித்த காட்சியின் அறிய வீடியோ.

-விளம்பரம்-

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR) என்ற படத்தை கைவசம் வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடித்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்துக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளாராம் எஸ்.எஸ்.ராஜமௌலி.

Advertisement