பிரசவம் முடிந்து திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – ஜெனி கொடுத்த சர்ப்ரைஸ். வைரல் புகைப்படம்.

0
523
jeni
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : தன் படத்தை கேலி செய்தவரின் டீவீட்டை ரீ-ட்வீட் செய்த டிஸ்ட்ரிபியூட்டரின் படங்களை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

- Advertisement -

மேலும், தங்களுக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்துவிடும் என்றும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஜெனிக்கு, ஆண் குழந்தை பிறந்து இருந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதும் மகனாக பிறந்து இருக்கிறார். ஆனால், ஏற்கனவே வீடியோ ஒன்றில் பேசிய ஜெனி பெண் குழந்தையை எதிர் நோக்கி காத்திருப்பாதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என குறிப்பிட்டு தனது லேட்டஸ்ட் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. விரைவில் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுங்க எனவும் கமெண்டில் அவரிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், அவர் நிச்சயம் பாக்கியலட்சுமி தொடருக்கு வரமாட்டார் என்பதே உண்மை.

-விளம்பரம்-
Advertisement