நள்ளிரவில் நடு கடலின் பிறந்தநாள் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – இப்போ தான் இவருக்கு 19 வயசே ஆகுதா.

0
876
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

-விளம்பரம்-

இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொடுக்கிறது. மேலும், கோபி இரண்டாவது திருமணம் செய்யப் போகிறான் என்ற உண்மை தெரிந்தவுடன் கோபியின் அப்பா மனமுடைந்து மாடியிலிருந்து கீழே தவறி விழுகிறார். இதனால் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் நடக்க முடியாமல் போகிறது.

- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியல் :

பின் வீட்டில் உள்ள எல்லோருமே சோகத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார்கள். ஆனால், கோபி, ராதிகாவிற்கு விவாகரத்து கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார். பிறகு ராதிகா, கோபி இருவரும் சேர்ந்து கோபிக்கு அவருடைய மனைவி இடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வாங்குகிறார்கள். பின் ராதிகா, இதில் எப்படியாவது உங்கள் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம், வீட்டில் சுமங்கலி விரத பூஜை நடக்கிறது.

வைரலாகும் நேகா வீடியோ:

அதில் எல்லா சுமங்கலிகள் கலந்துகொண்டு கொண்டிருக்கிறார்கள் .இந்த தருணத்தில் கோபி விவாகரத்து பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்வாரா? ராதிகாவிற்கு கோபியின் மனைவி தான் பாக்கியா என்பது தெரிந்ததா? இதையெல்லாம் இனிவரும் காலங்களில் பார்க்கலாம். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்தின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நடுக்கடலில் நேகா பிறந்தநாள் கொண்டாட்டம்:

அது என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சேர்ந்து இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகாவின் பிறந்த நாளை நடுக்கடலில் கொண்டாடியிருக்கிறார்கள். அதில் எழில், ஜெனி, செல்வி ஆகிய எல்லோரும் கலந்துகொண்டு இனியாவின் பிறந்த நாளை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நேகா.

நேகா திரை பயணம்:

இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வாழ்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் தன் தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார். இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி,சித்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். பின் இவர் குறும்படத்தில் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் நேகா. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

Advertisement