முக்கி முக்கி பார்த்தும் குறைந்து வரும் TRP – பிரைம் டைம் சீரியல்களில் விஜய் டிவி எடுத்த முக்கிய முடிவு

0
457
- Advertisement -

சீரியலின் டிஆர்பி ரேட்டிங்காக விஜய் டிவி செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். முதல் நாள் திங்கள் தொடங்கி சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி திகழ்கிறது.

- Advertisement -

விஜய் டிவி சீரியல்கள்:

அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி,விஜய் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த நிலையில் சில வாரங்களாகவே விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து கொண்டே வருகிறது. சன் டிவி தான் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். விஜய் டிவி தாக்கு பிடிக்க முடியாமல் பின்னுக்கு வந்துவிட்டது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் தொடர் என்றால் சிறகடிக்க ஆசை.

சிறகடிக்க ஆசை:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை பரபரப்பாகவும், எதிர்பார்ப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டி ஆர் பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி 8.51 ஆகும்.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்திருந்தது. குடும்ப பெண்களின் கதையை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில மாதங்களாக இந்த சீரியல் டிஆர்பி பின்னோக்கி இருக்கிறது. தற்போது இந்த சீரியல் இரண்டாம் இடத்தைப் பெற்று இருக்கிறது. இதன் டிஆர்பி 7.48.

மகா சங்கமம் சீரியல்கள்:

அதேபோல் பலரும் எதிர்பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனுடைய டிஆர்பி புள்ளி 5. 52. இப்படி பிரபலமான சீரியல்கள் பின்னுக்கு தள்ளி போவதால் மகா சங்கமம் என்ற ஆயுதத்தை விஜய் டிவி கையில் எடுத்திருக்கிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்பத்தையும் மகா சங்கமாக இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாவது சீரியல் உடைய டிஆர்பி எகிருதா? என்பதை பார்க்கலாம்.

Advertisement