தாத்தா ஆன நிலையில் மீண்டும் தந்தையான கோபி, பாக்கியலட்சுமி தொடர் செல்லும் விதத்தால் கடுப்பான ரசிகர்கள்

0
483
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார்.

- Advertisement -

அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். இதை பார்த்து கோபி வயிறு எரிகிறார். எல்லோரும் ரெஸ்டாரன்ட் திறந்த சந்தோத்தில் இருக்கிறார்கள்.

பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். கோபி ஹோட்டலில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், பாக்கியா ஹோட்டலில் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடக்கவில்லை. சமீபத்தில் நடந்த எபிசோடில் பழனிசாமிக்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டிற்கு பாக்கிய குடும்பத்தினர் அனைவருமே வருகிறார்கள்.அப்போது பழனிசாமியின் அம்மா, பாக்யாவை திருமணம் செய்து வைப்பது குறித்து தன்னுடைய மகளிடம் பேசுகிறார்.

-விளம்பரம்-

அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். விழாவில் பழனிசாமிடம், உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்று கேட்கும் போது அவர் ஒவ்வொன்னும் சொல்லும் போதும் அதை பாக்கியா செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பழணிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. அதேபோல, பழனிசாமியின் அக்கா மகன் இனியாவுடன் கடந்த தினங்களாக வழிந்து வருகிறார். இப்படி காலம்போன வயதில் ஒரு காதல், கல்லூரி வயதில் ஒரு காதல் என்று சென்று கொண்டு இருக்கும் இந்த தொடரை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இப்படி சீரியலே கொஞ்சம் Cringe தனமாக சென்று கொண்டு இருக்க தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர். கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாக இருக்கிறார் கோபி. அதுவும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம் என்ற கூச்சம் இல்லாமல் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொன்னதும் அவரை தூக்கி கொண்டாடி இருக்கிறார் கோபி.

Advertisement