விரைவில் கோபி-ராதிகா திருமணம், அடுத்து நடக்க போவது குறித்து சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்

0
256
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

-விளம்பரம்-
Baakiyalakshmi Iniya Friend Suicide | பாக்கியலட்சுமி இனியா

இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார். சீரியலில் பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பாக்கியா கைது செய்யப்படுகிறார். மொத்தக் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. பின் எழில் தன் அம்மா பாக்கியா சமையலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை கண்டு பிடிக்கிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி கதை:

இதனால் நீதிமன்றம் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்று அவரை விடுவிக்கிறது. ஆனால், கோபி பாக்கியாவை சமையல் செய்யக்கூடாது, உன்னால் தான் இந்த வீட்டில் இவ்வளவு பிரச்சினை என்று சண்டை போடுகிறார். இருந்தும் பாக்கியா சமையல் செய்கிறார். ஆனால், பாக்கியா செய்த சமையலில் பிரச்சனை இருக்கிறது என்று யாரும் வாங்க வரவில்லை. இதனால் பாக்கியா மனமுடைந்து வேதனையில் இருக்கிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக, தைரியமாகவும் இருக்கிறது.

சீரியல் பற்றிய தகவல்:

பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. தொடரில் பாக்கியா கணவர் கோபி எப்போது மாற்றிக்கொள்வார்? முக்கியமாக ராதிகாவிடம் எப்போது மாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த தொடரை குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் விஜய் டிவியில் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடந்தது.

-விளம்பரம்-
Vijay Television Awards 2022 Winners | விஜய் டிவி விருதுகள்

விஜய் டெலிவிஷன் விருதுகள்:

விஜய் டிவியில் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடந்து உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியல் ,

This image has an empty alt attribute; its file name is 1-72-1024x1024.jpg

பாக்கியலட்சுமி சீரியல் விருதுகள்:

துணை நடிகை- ரேஷ்மா
சிறந்த அப்பா- ரோசரி
துணை நடிகர்- விஷால்
சிறந்த நாயகி- சுசித்ரா
சிறந்த இயக்குனர்- டேவிட்
சிறந்த சீரியல்- பாக்கியலட்சுமி
சிறந்த வில்லன்- சதீஷ்

கோபி- ராதிகா திருமணம்:

இப்படி பல பிரிவுகளில் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் விருதுகளை பெற்றுள்ளது. மேலும், விருதுகளை பெற்ற நடிகர்களும் தங்களுடைய நன்றியை தெரிவித்து இருந்தார்கள். பின் சிறந்த அப்பாவுக்கான விருதை ரோசரி பெற்றிருக்கிறார். அவரிடம் தொகுப்பாளர், கோபி சிக்கி உங்களிடம் அடி வாங்குவாரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு ரோசரி கூறியிருப்பது, கூடிய விரைவில் கோபி – ராதிகா திருமணம் நடக்க இருக்கிறது. அப்போது குடும்பமே சேர்ந்து அவரை அடிக்கும் என்று கூறியுள்ளார். இப்படி இவர் சொன்னதை வைத்து பார்க்கும்போது கோபி- ராதிகா திருமணம் உறுதியாகி உள்ளது. இதை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

Advertisement