சமீபத்தில் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல சினிமா துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மோடியை விமர்சித்து பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான வில்லனாக கலக்கியவர். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லனாக தான் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பயப்படாதே ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.
அந்தளவிற்கு படங்களில் மன்சூர் அலிகான் மிரட்டியிருப்பார். இவர் சினிமா உலகில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.மேலும், இவர் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.
மன்சூர் அலிகானும் அரசியலும் :
மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதோடு அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
விவேக் மரணம் குறித்து சர்ச்சை :
கடந்த ஆண்டு விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட மருத்துவமனைக்கு வெளியில் சென்று அவருக்கு ஏன் தடுப்பூசி போட்டார்கள் அதனால் தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதுபோக பிரதமர் மோடி குறித்து அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் பேசியதாவது : –
மோடி குறித்து மன்சூர்:
அம்பேத்கருடன் மோடியை ஒப்பீட்டு பேசுவது தவறு. அவரின் கால் தூசிக்குக்கூட மோடி ஈடாக மாட்டார். அதனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது ரொம்ப ரொம்ப தவறு” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார்.
விவாதத்திற்கு உள்ளான ராஜாவின் பேச்சு :
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள் என்று இளையராஜா பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.