பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பே பிரபல இயக்குனர் படத்தில் நடித்திருக்கும் பாக்யா. எந்த படத்தில் பாருங்க.

0
664
Baakiyalakshmi
- Advertisement -

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் பாக்கியலட்சுமி சுசித்ரா நடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

சீரியலின் கதை:

இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும், கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். தற்போது சீரியல் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று கோபியும் ராதிகாவும் நினைக்கிறார்கள்.

-விளம்பரம்-

சுசித்ரா குறித்த தகவல்:

பின் இவர்கள் முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று கோபியும் ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வருகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கோபத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம், பாக்கியாவிற்கு சமையல் காண்ட்ராக்ட் கிடைக்கிறது. பாக்கியா தான் போட்ட சவாலில் வெற்றியடைவாரா? கோபி – ராதிகா உடைய திருமண வாழ்க்கை நீடிக்குமா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும் இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சுசித்ரா.

சுசித்ரா நடித்த தமிழ் படம்:

இவர் கன்னட நடிகை ஆவார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்னத்திரைக்கு வந்தார். இவர் தற்போது சின்னத்திரையில் நடித்திருந்தாலும் இதற்கு முன் வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் தமிழில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சைவம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் தமிழ், கன்னட மொழியில் உருவாகிறது.

Advertisement