விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் கடந்த வாரம் கொட்டுப்போன சாப்பாட்டை கொடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரண்டில் கலவரம் வெடித்தது. சாப்பாடு வாங்கிய எல்லோரும், பாக்யாவிடம் சண்டைக்கு போனார்கள். பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருந்தார்.
இன்னொரு பக்கம் அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார். உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்து, அதிகாரிகள் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்தார்கள். மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்தி இருந்தார்கள். மேலும், ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தை அறிந்து மொத்த குடும்பமே வேதனைப்படுகிறது. செழியன்,எழில் இருவருமே கடைக்கு வந்து எல்லோரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால், யாரும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மக்கள் ஆவேசத்தில் பாக்கியாவை தாக்க போக, எழில் தடுத்து விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் பாக்கியா, நான் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். எனக்கு டைம் கொடுங்கள் என்று பேசி இருந்தார். இந்த வாரம் உணவுத்துறை அதிகாரிகள், சோதனையில் கெட்டுப்போன பொருட்களை வைத்து சமைத்தது தெரிய வந்தது. உங்கள் ரெஸ்டாரன்ட்டுக்கு 50,000 பைன் என்று கடைக்கு சீல் வைத்தார்கள். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். சோசியல் மீடியா, நியூஸ் ஊடகங்கள் எல்லாமே பாக்கியா உணவு குறித்து தவறான செய்திகள் பரவிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்யாவின் ரெஸ்டாரண்டை குறித்து வரும் செய்தியை பார்த்து சந்தோஷப்பட்டு நடந்ததை ராதிகாவிடம் சொன்னார். ஆனால், ராதிகா அதை நம்பவில்லை.

நேற்று எபிசோட்:
அதோடு ஈஸ்வரி, என்னால் தான் இதெல்லாம் நடந்தது என்று புலம்ப, பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் பாக்யா கணக்கு பார்த்ததில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தது தெரிய வந்தது. நேற்று எபிசோடில், பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்று பாக்கியா வருத்தப்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை நினைத்துக் கொண்டு இருந்தார். மறுநாள் செல்வி, பாக்கியா வாக்கிங் போனார்கள். அப்போது கோபி சந்தோஷத்தில் அவரை கிண்டல் கேலியும் ஆக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
பாக்கியாவும் பதிலுக்கு கோபியிடம் சவால் விட்டு வந்தார். பின் வீட்டில் ஜெனியின் அம்மா, ராமமூர்த்தி தாத்தா இருந்த சந்தோஷம் இந்த வீட்டில் இப்போ இல்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால், ஜெனி அவளையும், குழந்தையும் கண்டு கொள்வது இல்லை என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜெனியை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல அவருடைய அம்மா கேட்கிறார். ஆரம்பத்தில் பாக்யா தயங்கினாலும் ஜெனியை அழைத்து செல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால், ஜெனி பிடிவாதமாக முடியாது என்று மறுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ஜெனி அம்மா வேறு வழியில்லாமல் அமைதியாக சென்று விடுகிறார். பின் ரெஸ்டாரண்டை பார்த்து பாக்கியா ரொம்ப வருத்தப்பட, பழனிச்சாமி- எழில் எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்று பாக்கியா போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஜெனி, செழியனுக்கு போன் செய்து பணத்தை ரெடி பண்ணுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார். அப்போது ஆபீஸில் செழியன் போனில் பேசுவதை பார்த்த அதிகாரி அவரை கூப்பிட்டு, உங்களுக்கு வேலை இல்லை. இத்தனை பேருக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது என்று சொல்ல செழியன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






